செஞ்சி அருகேலாரி மோதி பஸ் கண்டக்டர் சாவுமனைவி படுகாயம்


செஞ்சி அருகேலாரி மோதி பஸ் கண்டக்டர் சாவுமனைவி படுகாயம்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே லாரி மோதி பஸ் கண்டக்டர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்


செஞ்சி,

மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் மதுரா ஈராடி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் பழனி (வயது 45). சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிசெய்தார். இவரது மனைவி வசந்தி(35). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் செஞ்சியை அடுத்த மேற்கலவாய் அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்து போனார். படுகாயமடைந்த வசந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து உறவினர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story