மரத்தில் பஸ் மோதல்; 10 பேர் காயம்


மரத்தில் பஸ் மோதல்; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே மரத்தில் பஸ் மோதல்; 10 பேர் காயம்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை மயிலாடுதுறைக்கு எண் 1சி என்ற அரசு பஸ் சென்றது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் . நடராஜபுரத்தை அடுத்த மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் பஸ் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சாலையில் நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story