பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய பஸ் டிரைவர் கைது


பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய பஸ் டிரைவர் கைது
x

பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் அருகே உள்ள விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் அஜித். பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த கபில் (வயது 30). மினி பஸ் டிரைவர். நண்பர்களான 2 பேரும் வேப்பம்பாளையம் பகுதியில் ஒரு கடை அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கபில் பீர் பாட்டிலால் அஜித்தை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த அஜித்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அஜித் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து, கபிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story