செருதப்பட்டிக்கு மீண்டும் அரசு பஸ் வசதி


செருதப்பட்டிக்கு மீண்டும் அரசு பஸ் வசதி
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செருதப்பட்டிக்கு மீண்டும் அரசு பஸ் வசதியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பருகுப்பட்டி, அணியம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, கரப்பட்டி, கே. புதூர், தேத்திப்பட்டி ஆகிய கிராம புறவழியாக செருதப்பட்டி வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் இந்த பகுதி பொதுமக்கள் தினந்தோறும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி சிங்கம்புணரியில் இருந்து செருதப்பட்டிக்கு பஸ் இயக்க ஏற்பாடு செய்தார். அதன்படி நேற்று முதல் வகுத்தெழுவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செருதப்பட்டி வரை அரசு பஸ் இயக்கப்பட்டது.

முன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ரிப்பன் வெட்டியும் பச்சைக் கொடி அசைத்தும் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். காலை 6 மணிக்கும் மாலை 7 மணிக்கும் என நாள் ஒன்றுக்கு 2 முறை தற்சமயம் பஸ் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினார்கள்.

பஸ் வசதி ஏற்படுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி சுந்தரராசு மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராசு, துணைத்தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வகுத்தெழுவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, சோமசுந்தரம், நகர செயலாளர் கதிர்வேல், நகர அவைத்தலைவர் சிவக்குமார், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற துணைதலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவபுரிசேகர், முத்துக்குமார், நகர துணை செயலாளர் அலாவுதீன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர பொருளாளர் செந்தில் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வக்குமார், தனுஷ்கோடி, பிரதிநிதி குடோன் மணி, தருண் மெடிக்கல் புகழேந்தி, மருத்துவர் அருள்மணி நாகராஜன், மேலப்பட்டி சிவகுமார், இளைஞர் அணி மனோகரன் மற்றும் விளையாட்டு துறை மாவட்ட துணை அமைப்பாளர் கோபால கண்ணன், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில், ஞானி செந்தில், பொன் சரவணன், வையாபுரி செந்தில், பரிஞ்சி சரவணன், அமுதன், அருண் சிவபுரிசேகர், முரசொலி கார்த்திக், தொண்டரணி துரைச்சாமி மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள், தி.மு.க ஒன்றிய நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story