புதிய வழித்தடத்தில் பஸ் வசதி


புதிய வழித்தடத்தில் பஸ் வசதி
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய வழித்தடத்தில் பஸ் வசதி செய்து தர எம்.எல்.ஏ.விடம் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்

சிவகங்கை

இளையான்குட

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான சாத்தணி, வல்லக்குளம், அரண்மனைக்கரை, கலங்காதான்கோட்டை, நெஞ்சத்தூர், சோதுகுடி, அரனையூர், துகவூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளை இணைத்து புதிய வழித்தடத்தில் மதுரைக்கு செல்லும் வகையில் புதிய அரசு பஸ் வசதி செய்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பகுதி கிராம பொதுமக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் மருத்துவ வசதிக்காக மதுரைக்கு செல்ல இளையான்குடி, காளையார்கோவில், பரமக்குடி வழியே பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து செங்கொடி முத்தூர், சாலைக்கிராமம், தொகுவூர், கலங்காதான்கோட்டை, இளையான்குடி, சிவகங்கை வரச்சூர் வழியாக மதுரைக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசுக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும், தமிழரசி எம்.எல்.ஏ.வுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story