மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது - அமைச்சர் சிவசங்கர்


மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது - அமைச்சர் சிவசங்கர்
x

மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

நாமக்கலில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத்துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story