பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ் வசதி


பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ் வசதி
x

பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்

பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோரிக்கை

மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஊராட்சி மலையாண்டிப்பட்டினம் கிராமத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் துங்காவி மற்றும் உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் உரிய பஸ் வசதி இல்லாததால் சிரமங்களை சந்தித்து வந்தனர்.

எனவே பள்ளி, கல்லூரி நேரங்களுக்கு பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து துங்காவி ஊராட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் போக்குவரத்து கழக உடுமலை கிளை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணனிடம் பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் பரமேஸ்வரி மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அவர் மாணவர்களின் கோரிக்கையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

உடனடி நடவடிக்கை

மாணவர்களின் கோரிக்கையை கேட்ட அமைச்சர் மலையாண்டிபட்டினத்துக்கு காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி நேரங்களுக்கு பஸ் வசதி செய்து தர போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று மாலை முதல் உடுமலையிலிருந்து மலையாண்டிபட்டினம் கிராமத்துக்கு பஸ் இயக்கப்பட்டது.

அந்த பஸ்சுக்கு துங்காவியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த பஸ் உடுமலையிலிருந்து தினசரி காலை தினசரி காலை 8 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு மலையாண்டிபட்டினம் வந்தடையும். அங்கு இருந்து புறப்பட்டு உடுமலை வந்து சேரும். மாலையில் 3.50 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு மலையாண்டிபட்டினத்துக்கு வரும்.

இதன்மூலம் மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் நிலை உள்ளது.


Related Tags :
Next Story