வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதியது. இதனால் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதியது. இதனால் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதியது. இதனால் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி மீது பஸ் மோதல்
வால்பாறையில் இருந்து கோவையை நோக்கி கருமலை வழியாக இன்று காலை 6.30 மணிக்கு அரசு பஸ் சென்றது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சோலைக்குறுக்கு அருகே சென்றபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து வால்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. உடனே அரசு பஸ் டிரைவர் பிரேக் போட்டார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் எதிரே வந்த லாரி மீது அரசு பஸ் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் லட்சுமி காந்தன்(வயது 46) மற்றும் பயணிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த காடம்பாறை போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் லாரி மற்றும் அரசு பஸ்சை சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சித்தனர். ஆனால் லாரி பழுதாகி இருந்தது. இதனால் அரசு பஸ்சை அப்புறப்படுத்தியபோதும், லாரியை அப்புறப்படுத்துவது சவாலாக இருந்தது.
தொடர்ந்து நீண்ட நேரம் போராடி லாரியை முன்னோக்கி இயக்க முயன்றபோது, பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த லாரி, அங்கு நின்ற கார் மீது மோதி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்தது. பின்னர் வாகன ஓட்டிகள், போலீசார், பயணிகள் இணைந்து லாரியை சாலையோரத்துக்கு தள்ளி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 3½ மணி நேரத்துக்கு பிறகு காலை 10 மணிக்கு போக்குவரத்து சீரானது.