உ.செல்லூர்-உளுந்தூர்பேட்டை இடையே அரசு பஸ் சேவை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


உ.செல்லூர்-உளுந்தூர்பேட்டை இடையே அரசு பஸ் சேவை    மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

உ.செல்லூர்-உளுந்தூர்பேட்டை இடையே அரசு பஸ் சேவையை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என அக்கிராம மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணனுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவருடைய தீவிர முயற்சியின் பேரில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் உ.செல்லூர்-உளுந்தூர்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி உ.செல்லூரில் நடந்தது. இதற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆத்மா குழு தலைவர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் ராமலிங்கம், தாசில்தார் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மோகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவிகள், கிராம மக்கள் நலன் கருதி அரசு பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்ட மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.வுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story