ஆவடியில் இருந்து நெல்லூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை - அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்


ஆவடியில் இருந்து நெல்லூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை - அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்
x

ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கைக்கடிகாரங்களை அமைச்சர் நாசர் பரிசாக வழங்கினார்.

சென்னை,

சென்னை ஆவடியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு பேருந்து சேவையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது அந்த பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்கும் வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கைக்கடிகாரங்களை அவர் பரிசாக வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அமைச்சர் நாசர் பேருந்தில் டிக்கெட் எடுத்து, சிறிது தூரம் பயணம் செய்து மகிழ்ந்தார்.

1 More update

Next Story