புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து


புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து
x
தினத்தந்தி 15 Sept 2023 1:30 AM IST (Updated: 15 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்

கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூரில் போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி, சுல்தான்பத்தேரி மற்றும் பந்தலூர் தாலுகா கூவமூலா பகுதிக்கு நேற்று முன்தினம் முதல் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட கலெக்டர் அருணா, ஊட்டி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நடராஜன், கூடலூர் மேலாளர் அருள் கண்ணன் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story