கொடைக்கானல்-மூணாறு இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து


கொடைக்கானல்-மூணாறு இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து
x

கொடைக்கானல்-மூணாறு இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், கொடைக்கானலில் தங்கியிருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் இருந்து மூணாறுக்கு பஸ் இயக்கப்பட்டது.

ஆனால் அந்த பஸ் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மூணாறு செல்வதற்கு, பல்வேறு நகரங்களுக்கு சென்று மாறி மாறி பஸ்சில் பயணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக்கானல் நகரில் இருந்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மூணாறுக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story