பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் - சென்னை மாநகர பேருந்துகளில் தொடக்கம்
தமிழ், ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய நிறுத்தம் குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
சென்னை,
சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு பேருந்தில் பொருத்தப்படும் ஸ்பீக்கர் மூலம் பயணியருக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாக பேருந்து நிறுத்ததின் பெயர் குறித்த தகவல் ஒலிபரப்பப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக "புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு" திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேருந்தில் பயணித்தனர்.
Related Tags :
Next Story