நத்தம் அருகே ஓட்டலுக்குள் புகுந்த பஸ்: பூ வியாபாரி உள்பட 2 பேர் பலி
நத்தம் அருகே ஓட்டலுக்குள் பஸ் புகுந்ததில் பூ வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து மதுரை ேநாக்கி அரசு பஸ் ஒன்று இன்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, மதுைர விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த சசிகுமார் ஓட்டினார்.
நத்தம்- மதுரை சாலையில் புளிக்கடை பஸ் நிறுத்தம் அருேக பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.
இந்த விபத்தில், ஓட்டல் அருேக மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த தேவராஜ் (வயது 61), சீரங்கம்பட்டியை சேர்ந்த பூ வியாபாரி பாண்டி (50) ஆகியோர் மீது பஸ் மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
10 பேர் காயம்
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்தவா்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஸ் மோதியதில் பயணிகள் மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் நத்தம்-மதுரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.