புதிய வழித்தடத்தில் பஸ்கள்


புதிய வழித்தடத்தில் பஸ்கள்
x

புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன

சிவகங்கை

காரைக்குடி,

அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் சார்பில் காரைக்குடியில் இருந்து கிருஷ்ண சமுத்திரம், சித்திரம்பூர் வரை நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் கலந்துகொண்டு புதிய வழித்தடத்தில் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் மெய்யர், கண்ணன், ரெத்தினம், பசும்பொன் மனோகரன், நகர் நலச்சங்க தலைவர் காரை சுரேஷ், காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்கபாண்டியன், சுந்தரபண்டியன், ராஜமூர்த்தி, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story