நாகர்கோவிலில் புதர் மண்டி கிடக்கும்தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்


நாகர்கோவிலில் புதர் மண்டி கிடக்கும்தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் புதர் மண்டி கிடக்கும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் 38 வார்டுக்கு உட்பட்ட ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு அருகே சவுராஷ்டார தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் 2009-ம் ஆண்டு அன்றைய சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் செலவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அதன்பின்பு சில நாட்கள் மட்டும் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்படும் வகையில் காணப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல போதிய பரமரிப்பு இன்றி தூர்நாற்றம் வீச தொடங்கியது. தற்போது குளத்தில் புதர்மண்டி, செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அந்த இடம் மதுபிரியர்களுக்கு புகலிடமாக மாறி வருகிறது. எனவே, குளத்தில் உள்ள புதர்களை அகற்றி தூர் வாரி மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story