ஐபோன் வாங்க ஆசைப்பட்டு ரூ.5¼ லட்சம் இழந்த தொழில் அதிபர்
ஐபோன் வாங்க ஆசைப்பட்டு தொழில் அதிபர் ரூ.5¼ லட்சம் இழந்தார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தொழில் அதிபர் பிரதீப் குமார் (வயது 30). இவர் ஒரு இணையதளம் மூலம் குறைந்த விலையில் ஐபோன் வாங்க முயன்றார்.
இதற்காக அவர் முதலில் குறைந்த பணத்தை செலுத்தினார். அதன்பின்னர் அவர் கள், ஐபோனுக்கு சுங்க கட்டணம், ஷிப்பிங் உள்பட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இதை நம்பி பல்வேறு கட்டங்களாக ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்தை பிரதீப்குமார் செலுத்தி உள்ளார்.
ஆனால் அவருக்கு ஐபோன் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர், பணபரிமாற் றம் செய்த 5 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். பின்னர் கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்று முடக்கப்பட்ட அந்த 5 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்தை மீட்ட னர்.
மீட்கப்பட்ட ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்துக்கான வரைவோ லையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தொழிலதிபர் பிரதீப் குமாரிடம் நேற்று வழங்கினார்.