தொழில் அதிபர் கொலை வழக்கு: மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொழில் அதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிஜாமுகைதீனை கொலை செய்த மர்ம ஆசாமிகள் 170 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கைதான நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த முகமது யூனுஸ் (வயது 29), ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக் முகமது யூசுப் (32) ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் அவர்களிடம் கையெழுத்து பெற்று 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.