சத்தியமங்கலம் அருகே பரபரப்புவேன் டிரைவர் அடித்துக்கொலை


சத்தியமங்கலம் அருகே  பரபரப்புவேன் டிரைவர் அடித்துக்கொலை
x

சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவரை அடித்துக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே வேன் டிரைவரை அடித்துக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டிரைவர்

சத்தியமங்கலத்தை அடுத்த சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). தனியார் பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி கல்யாணி.

இவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் காருண்யா (13). மாரிமுத்து நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

சாவு

இந்த நிலையில் நேற்று காலை கோவை ரோட்டில் சிவில் சப்ளை குடோன் அருகே உள்ள வாய்க்கால் மேட்டில் உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை பார்த்தனர். அப்போது நெற்றியில் அடிபட்டு அதில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் மாரிமுத்து நெற்றியில் பலமாக தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாக சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம் அருகே டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story