ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்ககருவிழி பதிவு முறையை செயல்படுத்த கோரிக்கை


ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்ககருவிழி பதிவு முறையை செயல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:32+05:30)

கம்பத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கருவிழி பதிவு முறையை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனித்தனியாக பிரித்து ரசீது போட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கம்பத்தில் உள்ள 18 ரேஷன் கடைகள், 3 மகளிர் ரேஷன் கடைகள் உள்பட 21 கடைகளில் அரிசி வாங்க செல்லும் ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச். கார்டுதாரர்கள் 2 முறை கை ரேகை வைத்து மத்திய அரசுக்கு தனியாகவும், மாநில அரசுக்கு தனியாகவும் அரிசி பெற்று வருகின்றனர். மற்ற வகை ரேஷன் கார்டுதாரர்கள் ஒரு முறை கைரேகை பதிவு செய்து அரிசி பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சிலருக்கு கை ரேகை பல முறை வைத்தால் மட்டுமே கைரேகை பதிவாகின்றன. இந்நிலையில் புதிய திட்டத்தால் கைரேகை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் கை ரேகை பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கருவிழி மூலம் பதிவு செய்து அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story