தேர்தல் பிரசாரத்துக்கு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


தேர்தல் பிரசாரத்துக்கு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

தேர்தல் பிரசாரத்துக்கு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு

தேர்தல் பிரசாரத்துக்கு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து பேசுகிறார். இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர். இதேபோல் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர்.

ஈரோட்டில் தங்கினார்

கோவையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் ஈரோட்டுக்கு வந்தார். அவர் ஈரோடு பெருந்துறைரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று (சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை அவர் 2 கட்டமாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.


Next Story