அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பிரசாரம்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று ஈரோடு கருங்கல்பாளையம், அக்ரஹாரம், ஜோசப்தோட்டம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர், துணிகளுக்கு இஸ்திரி போட்டும், பொதுமக்களிடம் அ.தி.மு.க. சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுதாகர், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜநாராயணன், காசிராஜன் நிர்வாகிகள் பெருமாள், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.