நடை பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம்


நடை பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம்
x

நடை பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி அவர் ஓட்டு கேட்டார். இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் எடுத்து கூறினார்.

இந்த பிரசாரத்தின்போது ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஈ.பி.ரவி, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story