சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா


சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நடுநிலைப்பள்ளியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன் நாடார் ஆலோசனையின்படி நடந்த விழாவிற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ், மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். விழாவில் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story