கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி


கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 28 Sep 2022 7:00 PM GMT (Updated: 28 Sep 2022 7:00 PM GMT)

கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலியானார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே வாைழக்காய்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). இவர் கோபால்பட்டி அருகே மேட்டுக்கடையில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது நண்பர் சித்திக்குடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து மேட்டுக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அழகர்சாமி ஓட்டினார். பின்னால் சித்திக் அமர்ந்திருந்தார். நொச்சிஓடைபட்டி அருகே அவர்கள் வந்தபோது, கவராயப்பட்டி பிரிவில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். சித்திக், ராஜ்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story