மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்


மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

விசாரணை

இதுகுறித்து அவர் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களாக நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் கோவை பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் வேறொரு வழக்கில் கைதாகி சிறை சென்று உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் முறையாக கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது குற்ற சம்பவங்களை கண்டறிவதில் குறையாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பெயரளவில் தான் உள்ளது. அந்த பகுதிகளில் சக்திவாய்ந்த சாலைதெளிவாக தெரியும் வகையிலான கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர, காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்காக மாவட்ட காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

ஏற்பாடு

இதுதவிர, மாவட் டத்தில் வர்த்தக சங்கத்தினர், திருமண மண்டபத்தினர், வர்த்தக நிறுவனத்தினர், வணிக வளாகத்தினர் உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் நடத்தி அனை வரும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் விளக்கி கூறி அதற்கான ஏற்பாடு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். தெருப்பகுதிகள் நன்றாக தெரியும் வகையில் கேமராக்கள் பொருத்தப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story