காரிமங்கலம் போலீஸ் எல்லை பகுதியில்டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம் போலீஸ் நிலைய எல்லை கட்டுப்பாட்டில் 144 கிராமங்கள் உள்ளன. இங்கு அதிக கிராமங்கள் உள்ளதாலும், முக்கிய தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும், குற்ற செயல்களை அறிந்து நடவடிக்கை எடுக்கவும் காரிமங்கலம் போலீஸ் நிலையம் சார்பில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்குமார் மேற்பார்வையில் தொடங்கப்பட்டுள்ள கண்காணிப்பு பணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடக்கும் கிராமங்கள் கண்காணிக்கப்படுவதுடன் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் கண்காணித்து குற்ற செயல்களை தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story