தர்மபுரியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு


தர்மபுரியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 6 July 2023 12:30 AM IST (Updated: 6 July 2023 12:58 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். நிலம் சம்பந்தமாக வந்த புகார்களை விசாரிப்பதற்காகவும், காவலர்கள் இடையே உள்ள சந்தேகங்களை விளக்குவதற்காகவும், பொது மக்களுக்கு நிலம் சம்பந்தமான புகார்களை தெளிவுபடுத்தவும் முத்திரை கட்டணம் தனி தாசில்தார் வினோதா, நில அளவை ஆய்வாளர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர்.

1 More update

Next Story