வாழப்பாடி கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்

வாழப்பாடி கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம் நடத்தப்படுகிறது.
சேலம்
சேலம்:
வாழப்பாடி கோட்டம் மல்லியகரை, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, திருமனூர், வாழப்பாடி தெற்கு, பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், தும்பல், கருமந்துரை, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, உலிபுரம், செந்தாப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வாரிய இயக்கம், பராமரிப்பு அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது. இந்த முகாமை அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வாழப்பாடி மின்சார வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story






