பாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


பாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 20 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பாலக்கோடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் நடந்த முகாமை பேரூராட்சி தலைவர் முரளி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவக்குழுவினர் மார்பக புற்று நோய், சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். முகாமில் டாக்டர் பாலசுப்பிரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர்கள் டார்த்தி, கோமதி, ஆயிஷா, மருந்தாளுனர் முத்துசாமி மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story