கிருஷ்ணகிரியில், 26-ந் தேதிதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசினார்.
முகாம் வருகிற 26-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய உள்ளனர். தகுதியுடைய பணி தேடுபவர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேலும், இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்களுக்கு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புஅளிக்கப்படும்.