தர்மபுரியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 97 மனுக்கள் மீது உடனடி தீர்வு

x
தினத்தந்தி 31 Aug 2023 1:00 AM IST (Updated: 31 Aug 2023 6:06 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மனுக்கள் மீது உடனடி தீர்வு

இந்த விசாரணையில் 97 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்கள் தொடர் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த முகாமில் தர்மபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 97 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 118 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மனுக்கள் மீது உடனடி தீர்வு

இந்த விசாரணையில் 97 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்கள் தொடர் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த முகாமில் தர்மபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story