முகாம்


முகாம்
x

போலகம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பௌஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டது. அதேபோல் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பரிசோதனைகளும் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.


Next Story