பரமத்தி அருகே இடும்பன்குளம் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது 17 பேர் முகாம்களில் தங்க வைப்பு
பரமத்தி அருகே இடும்பன்குளம் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது 17 பேர் முகாம்களில் தங்க வைப்பு
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் ஏற்காடு மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பரமத்தி அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் ஏரி நிரம்பியது. இதையொட்டி இடும்பன்குளம் கரையோர பகுதியில் உள்ள பரமத்தி காந்திநகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த 17 பேர் பரமத்தி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, மண்டல துணை தாசில்தார் சித்ரா ஆகியோர் உணவு மற்றும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கினர்.
Related Tags :
Next Story