வருமுன் காப்போம் திட்ட முகாம்
திருச்செங்கோட்டில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மோடமங்கலம் பஞ்சாயத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமை திருச்செங்கோடு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் அட்மா குழு தலைவர் வட்டூர் தங்கவேல், மாவட்ட பயிற்சி அலுவலர் மனோஜ், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தமிழரசன், மோடமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழரசு ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த வருமுன் காப்போம் திட்டம் முகாமில் மக்களை தேடி மருத்துவம் என்ற தலைப்பில் முகாம் ஒவ்வொரு கிராமமாக நடைபெற்று வருகிறது. இங்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக சிகிச்சைகள் வழங்கபடுகிறது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு சிகிச்சை பெற்றுகொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.