வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உத்தரவின் பேரில் சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, துணைச்செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் பாண்டி, கோட்டையூர் பேரூர் யெலாளர் ராசு, துணைச் செயலாளர் கோவிந்தசாமி பெருமாள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story