இலவச மருத்துவ பரிசோதனை


இலவச மருத்துவ பரிசோதனை
x

இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகங்கை


திருப்புவனம் லாடனேந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன் முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இலவச மருத்துவ முகாமில் திருப்புவனம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர்.

முகாமில் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெயராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story