பாப்பிரெட்டிப்பட்டியில்அஞ்சல் துறை சேவை முகாம்


பாப்பிரெட்டிப்பட்டியில்அஞ்சல் துறை சேவை முகாம்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:45 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு சேவை முகாம் நடைபெற்றது. தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்முனிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமில் சேமிப்பு கணக்கு, ஒரு ஆண்டு வைப்பு கணக்கு, 5 ஆண்டு கால வைப்பு கணக்குகள், தொடர் வைப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, முதியோர் தின சேமிப்பு திட்டம் தொடக்கம், மாதாந்திர வருமான திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், பொது வைப்பு நிதி, கிஷான் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு கணக்கு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அஞ்சல் துறை அலுவலர்கள் பங்கேற்று விளக்க மளித்தனர்.


Next Story