புதுச்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


புதுச்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:30 AM IST (Updated: 11 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியம் பேசினார்.

முகாமில் 18 வயதுக்குட்பட்ட 103 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், மருத்துவ காப்பீடு பெற்று தருதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், இலவச பஸ் பயணச்சீட்டு பெற்று தருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story