கால்நடை கோமாரி தடுப்பூசி முகாம்


கால்நடை கோமாரி தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:33+05:30)

கால்நடை கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் கால்நடை கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி முனியசாமி தலைமை தாங்கினார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைத்தியனேந்தல், மேலபண்ணைகுளம், கீழப்பண்ணைகுளம், கீரனூர் ஆகிய கிராமங்களில் 150 மாடு மற்றும் கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர்கள் வீரன், சமாதான ஜெபமாலை கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேல், கீரனூர் வார்டு கவுன்சிலர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story