ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம்


தினத்தந்தி 11 April 2023 12:30 AM IST (Updated: 11 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும், உதவி பேராசிரியருமான ரம்யா மகேஸ்வரி, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 40 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.


Next Story