நாமக்கல்லில்உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்


நாமக்கல்லில்உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மேனகா வரவேற்று பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (தொடக்கநிலை) குமார் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

இப்பயிற்சியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு தன்னார்வலர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நாமக்கல் சட்டக்கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் கருத்தாளர்களாக விரிவுரையாளர் சவுந்தரம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி பேராசிரியர் நாகரத்தினம், ஆசிரியர் பயிற்றுநர்கள் லதா, பெரியசாமி, கோகிலா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

பயிற்சியில் பங்கேற்றவர்கள் வருகிற 6-ந் தேதி முதல் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று அந்த பள்ளியில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள், எந்த கல்லூரியில் உயர்கல்வி பயில வசதியாக இருக்கும் என்பதற்கான வழிகாட்டுதல்களை கொடுக்க உள்ளனர்.


Next Story