தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம்


தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில்போலீசாரின் குழந்தைகளுக்கு தோல் சிகிச்சை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி


தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் சிறுவர் மனமகிழ் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் உஷாராணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை கண்டறிந்து மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு தோல் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் அரசு டாக்டர்கள் வினோத்ராஜ், ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாது, தங்கராஜ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.


Next Story