உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க 11 அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்


உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க 11 அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 7:36 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வி பயில முதல் பட்டதாரி சான்று கேட்டு 209 பேரும், வருமான சான்று கேட்டு 85 பேரும், இருப்பிட சான்று கேட்டு 220 பேரும், சாதி சான்று கேட்டு 4 பேரும் என மொத்தம் 518 மாணவர்கள் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மாணவர்கள் உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சான்று பெற 11 அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே சான்று கோரி விண்ணப்பித்த மாணவர்கள் மைய தலைமை ஆசிரியரிடம் தேவையான ஆவணங்களை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஒப்படைத்து இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றுகள் பதிவேற்றம் செய்யும் பணி அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு), முத்துகாப்பட்டி, கோனூர், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அலவாய்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 11 பள்ளிகளில் நடக்கிறது. இணையதளத்தில் விண்ணப்பித்தவுடன் மாணவர்களுக்கு மேற்கண்ட சான்றுகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

======


Next Story