தர்மபுரியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - 115 மனுக்களுக்கு உடனடி தீர்வு


தர்மபுரியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் - 115 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:40 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 138 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 115 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 23 மனுக்கள் மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story