காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?


காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா?
x

தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டு தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

மணல் குவாரி

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி அமலாக்கத்துறை சோதனையால் மூடப்பட்டது. இதனால் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோட்டக்குறிச்சியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள காவிரி ஆற்றில் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் பொக்லைன் எந்திரம் மூலம் கரையில் ஓர் இடத்தில் மணலை குவித்து வைத்திருந்ததையும், பின்னர் அதை வாகனங்கள் மூலம் அள்ளி செல்வதையும் கண்டறிந்தனர்.

நடவடிக்கை தேவை

அதையடுத்து மணல் திருட்டை தடுக்கும் வகையில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக குழி பறித்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் சில நாட்களாக மணல் திருட்டு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த மர்ம நபர்கள் ரோட்டின் குறுக்கே அதிகாரிகள் பறித்த குழியை மூடிவிட்டு இரவில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளி வருகின்றனர். எனவே அவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story