தனித்து நின்று ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடியுமா? - திருமாவளவனுக்கு எச்.ராஜா கேள்வி
தனித்து நின்று ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடியுமா? என திருமாவளவனுக்கு எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக எம்.பி. ராசா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, அவர் மீது அரசாங்கம் 15 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் வழக்கு தொடரப்படும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், திருமாவளவன் தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று ஜெயிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடியை பெரியார் பாதைக்கு வாருங்கள் என அழைப்பது கண்டிக்கத்தக்க விஷயம் என்றார். திமுகவின் கடைசி மன்னன் ஸ்டாலின் ஆகும். திமுகவில் சின்னவர் எல்லாம் வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story