குமரியில் கனமழை காரணமாக கால்வாய் உடைப்பு... வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அச்சம்.!
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக புத்தனாறு கால்வாய் உடைந்ததால் விவசாய நிலங்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு சரல்விளை குருசடி அருகே கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை காரணமாக புத்தனாறு கால்வாய் உடைந்ததால் விவசாய நிலங்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மார்பளவு தண்ணீரில் இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.
மேலும், தீயணைப்புத் துறையினரும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கின்றனர்.
Related Tags :
Next Story