அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்


அத்தியாவசிய பொருட்களின் மீதான  ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்
x

அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நல்லம்பள்ளியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. வட்டார குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஷ்வரன், வட்டார செயலாளர் பிரசாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். அரிசி மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story