போத்தனூர் வழியாக இயங்கும் விரைவு ரெயில் ரத்து - சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் அறிவிப்பு
போத்தனூர் வழியாக இயங்கும் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை,
ரெயில்வே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் வழியாக இயக்கப்படும் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல் - பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை 25-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரெயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரெயில் (எண்:18190) 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.